சமூக வலைதளங்களை பயன்படுத்துவோருக்கு நடிகை கஸ்தூரியை தெரிந்திருக்கும். அவர் என்ன சொன்னாலும் அதை விமர்சனம் செய்து வருகிறார்கள் சிலர்.
அதே வேளையில் அவரிடம் ஆபாசமாக பேசுபவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்து வருகிறார். அண்மையில் அஜித் ரசிகர்கள் சிலர் அவரிடம் தவறாக நடந்து கொண்டது சர்ச்சையானது.
இது ஒருபக்கம் இருக்க சமூகவலைதளங்களில் இப்போது டிக் டாக் ஆப் அதிகம் ரசிகர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் சினிமா பட வசனங்களை பேசியும், பாடல்களை பாடியும் தங்களை பிரபலமாக்க பலரும் கிளம்பிவிட்டார்கள். இதில் ஆபாசமாக நடந்துகொள்வோரும் உண்டு.
இதனால் இந்த செயலியை தடை செய்ய வேண்டும் என சிலர் கூறுகிறார்கள். அதே வேளையில் குழந்தைகள் செய்யும் சில நல்ல விசயங்கள் பலரின் கவனத்தை பெற்றுவிடுகிறது.
இந்நிலையில் நடிகை கஸ்தூரி Tik Tok அ தடை பண்ணனும்னு சொல்றவங்க இதை பாருங்க மொதல்ல என தனக்கு பிடித்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதனை பாருங்கள் இங்கே…
Cutest video EVER!!
Tik Tok அ தடை பண்ணனும்னு சொல்றவங்க இதை பாருங்க மொதல்ல! pic.twitter.com/uAIlQfT4Ao— Kasturi Shankar (@KasthuriShankar) January 18, 2019