பரத் நீலகண்டன் இயக்கத்தில் அருள்நிதி – ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் உருவாகும் ‘K-13’ த்ரில்லர் திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க ஆதிக் ரவிச்சந்திரன் ஒப்பந்தமாகியுள்ளார்.
இத்திரைப்படத்தில் அருள்நிதி ஜோடியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கின்றார். இவர்களுடன், யோகி பாபு, ரமேஷ் திலக், எருமைசாணி விஜய் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
த்ரில்லர் கதையாக உருவாகும் இத்திரைப்படத்தின், பணிகள் விறுவிறுப்பாக நடைபெறுகின்றது.
ஆதிக் ரவிச்சந்திரன் மிகச்சிறப்பாக இத்திரைப்படத்தில் நடித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. படத்தில் அவரது பகுதி பார்வையாளர்களை பெரிதும் கவனிக்க வைக்கும் என்று கூறியுள்ளது.
சாம் சி.எஸ் இசையமைக்கும் இந்த படத்திற்கு அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்கின்றார். எஸ்.பி.சினிமாஸ் சார்பில் எஸ்.பி.ஷங்கர் மற்றும் சாந்த பிரியா ஆகியோர் இந்த படத்தை தயாரிக்கின்றனர்.