செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் NGK. இப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரும் எதிர்ப்பார்ப்பில் இருந்தது.
ஆனால், படம் எதிர்ப்பார்த்த வெற்றியை அடையவில்லை என்பதே உண்மை, உலக அளவிலேயே இப்படம் ரூ 50 கோடி வரை தான் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர் சமீபத்தில் ஒரு பேட்டியில் NGK எனக்கு வெற்றிப்படம் தான் என கூறியுள்ளார். தயாரிப்பாளரே சொல்லிவிட்டார், அப்பறம் என்ன ரசிகர்கள் கூறி வருகின்றனர்.