நடிகர் விஷ்ணு விஷால் ‘ராட்சசன்’ திரைப்படத்தின் வெற்றியியைத் தொடர்ந்து தற்போது பல படங்களில் நடித்து வருகின்றார்.
‘இன்று நேற்று நாளை’ படத்தின் இரண்டாம் பாகம், ‘வீர தீர சூரன்’ போன்ற படங்களில் நடித்து வருகின்றார்.
அந்தவகையில் இயக்குநர் மானு ஆனந்த் இயக்கத்தில் தற்போது ‘FIR’ திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது.
இந்த படமானது ISIS அமைப்புகளை பற்றிய படம் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
ஆனந்த் ராய் இந்த படத்தை தயாரிக்கிறார். மஞ்சுமா மோகன் இதில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக நடிக்கிறார். அஸ்வந்த் இந்த படத்திற்கு இசையமைக்கின்றார்.
இத்திரைப்படம் குறித்த ஏனைய அறிவிப்புக்கள் விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.