அட்லீ இயக்கத்தில் தீபாவளிக்கு வெளியாகவுள்ள பிகில் படத்தில் விஜய் பாடியுள்ள வெறித்தனம் பாடல் நேற்று மாலை 6 மணிக்கு லிரிக்ஸ் வீடியோவாக Youtube ல் வெளியிடப்பட்டது.
பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ள இப்பாடலுக்கு ரஹ்மான் இசையமைத்துள்ளார். பாடல் வெளியான 10 நிமிடங்களிலேயே 5 லட்சம் பார்வைகளை பெற்று சாதித்தது.
தற்போது 24 மணிநேரத்தில் 6 மில்லியன் பார்வைகளை பெற்று சாதனை படைத்துள்ளது. Youtube ல் அதிகம் பார்க்கப்பட்ட வீடியோக்களில் இப்பாடல் ட்ரெண்டிங்கில் நம்பர் 1 இடத்தில் உள்ளது.