காலந்தோறும் பெண்கள் மாறியுள்ளனர். ஆனால் பெண்களைப்பற்றிய பார்வை மட்டும்தான் மாறவில்லை என்றும் தான் குழந்தையே பெற்றுக்கொள்ள மாட்டேன் என்றும் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார்.
நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் நேர்கொண்ட பார்வை திரைப்படம் பற்றிய தன்னுடைய அனுபவங்கள் குறித்து வழங்கியுள்ள செவ்வியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதில் தொடர்ந்து தெரிவிக்கும் அவர், ‘பெண்களுக்கு இடம்பெறும் பாலியல் விழிப்புணர்வு குறித்து ஒருவருக்கும் தெளிவான பார்வை இல்லை.
இப்போதும் அதிகளவானோர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகுகிறார்கள். ஆனால் இதை வெளியில் கூறவோ, பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கவோ தயங்குகிறார்கள்.
தன் எதிர்காலம் பற்றிய கவலையும், தனது குடும்பம் பற்றிய சிந்தனையும் தான் இதற்கு காரணம்’ எனத் தெரிவித்துள்ளார்.