அகமத் இயக்கத்தில் நடிகர் ஜெயம்ரவி நடிக்கும் புதிய திரைப்படத்தின் இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோமாளி திரைப்படத்தை தொடர்ந்து ஜெயம்ரவி நடிக்கும் இந்த திரைப்படத்தில் நடிகை டாப்ஸி கதாநாயகியாக நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆக்ஷன் திரில்லர் பாணியில் உருவாகும் இந்தப் படத்தில் ஈரானிய நடிகை எல்நாஸ் நொரோஷியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.