ஸ்ரேயா நடிப்பில் உருவாகியுள்ள ‘சண்டகாரி தி பாஸ்’ திரைப்படம் விரைவில் திரைக்குவரவுள்ளதாக இயக்குனர் ஆர்.மாதேஷ் தெரிவித்துள்ளார்.
இந்த திரைப்படம் மலையாலத்தில் மை பாஸ் என்ற திரைப்படத்தினை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. நடிகர் விமல் கதாநாயகனாக நடிக்கும் இந்த திரைப்படதில் அவருக்கு ஜோடியாக நடிகை ஸ்ரேயா நடித்துள்ளார்.
அத்துடன் பிரபு, சத்யன், கே.ஆர்.விஜயா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
தற்போது இந்த திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்றுவருவதாக அறிவித்துள்ள படக்குழு, குறித்த திரைப்படம் விரைவில் திரைக்குவரவுள்ளதாகவும் அறிவித்துள்ளது.