பிக்பொஸ் நிகழ்ச்சியில் இந்தவாரம் மீண்டும் ஓபன் நாமிநேஷன் நடைபெறுகிறது.
17 போட்டியாளர்களுடன் ஆரம்பமாகிய பிக்பொஸ் நிகழ்ச்சி தற்போது 8 போட்டியாளர்களுடன் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
இதன்படி இன்று (திங்கட்கிழமை) வெளியாகியுள்ள முதல் புரோமோ காட்சியில் ஓபன் நாமினேஷன் நடைபெறுகிறது.
இதில் கவின், சேரன் மற்றும் செரினை நாமினேட் செய்கிறார். இதில் பேசிய கவின், ‘சேரன் பல வெற்றிகளை பார்த்தவர். இந்த நிகழ்ச்சியில் வெற்றிப்பெற வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. எனவே வெற்றியை ருசித்திராத தங்களைப்போன்ற இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும்’ எனக் கூறுகிறார்.
இதன்போது கவினின் கருத்தை மறுக்கும் வகையில் வனிதா தன்தரப்பு வாதத்தை ஆரம்பிக்க, சேரனை தனக்கு பிடிக்காததால் நோமினேட் செய்கிறேன் எனக் கவின் கூறுகிறார். இவ்வாறாக இன்றைய முதல் புரோமோ காட்சி வெளியாகியுள்ளது.
இதேவேளை லொஸ்லியா – கவின் இருவரும் பிக்பொஸ் வீட்டில் ஒருவரை ஒருவர் காதலித்து வருகின்றனர். இதை எதிர்க்கும் வகையில் சேரன் உள்ளிட்ட மற்ற போட்டியாளர்கள் லொஸ்லியாவிற்கு அறிவுரைக்கூறி வருகின்றனர்.
இதன்காரணமாக கவின் சேரனை நோமினேட் செய்திருக்கலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
பிக்பொஸ் நிகழ்ச்சி இறுதிகட்டத்தை நெருங்கிக்கொண்டிருக்கும் நிலையில் போட்டியாளர்கள் தங்கள் விளையாட்டை விறுவிறுப்பாக விளையாடிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.