நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகிவரும் ‘கோமாளி’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இடம் பெற்றுள்ளது.
இதில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே, பிரதீப் ரங்கநாதன், டாக்டர் இஷாரி கே. கணேஷ், அஸ்வின் குமார், பிரதீப் இ.ராகவ், ரிச்சர்ட் எம். நாதன் என படக்குழுவினர் பலர் கலந்து கொண்டனர்.
பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வரும் 15ஆம் திகதி இத்திரைப்படம் வெளியாகவுள்ளது இத்திரைப்படத்தில் நடிகை காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே இருவரும் கதாநாயகியாக நடித்துள்ளனர்.
யோகிபாபு இதில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ஹிப்ஹொப் தமிழாவின் இசையில் வெல்ஸ் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரித்துள்ளது.