துபாயில் வேலை கிடைக்காமல் நாடு திரும்பியவருக்கு லொட்டரியில் 28 கோடி ரூபாய் விழுந்துள்ளதால் மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்துள்ளார்.
தெலுங்கானாவின் நிஜாமாபாத்தை சேர்ந்தவர் விலாஸ் ரிக்கலா, மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் ஐதராபாத்தில் வசித்து வருகிறார்.
குடும்ப வறுமையால் துபாய் சென்றவருக்கு வேலை கிடைக்கவில்லை.
இதனால் சோகமாய் இருந்த விலாஸ், லொட்டரி சீட்டு ஒன்றை வாங்க நினைத்துள்ளார், பணம் ஏதும் இல்லாததால் மனைவிக்கு போன் செய்து பணத்தை அனுப்பிவைக்கும்படி கூறியுள்ளார்.
அவரும் பணம் அனுப்பவே, தன்னுடைய நண்பர் மூலம் லொட்டரி சீட்டு ஒன்றை வாங்கியுள்ளார்.
இதற்கிடையே விரக்தியில் இந்தியா திரும்பியவருக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டியுள்ளது, ஆம், நேற்று மாலை லொட்டரியில் 15 மில்லியன் திர்ஹாம் கிடைத்ததாக தகவல் வந்துள்ளது.
இந்திய மதிப்பின்படி சுமார் 28 கோடி ரூபாயாகும், இதனால் திக்குமுக்காடியுள்ளதாம் விலாஸின் குடும்பம்.