சுஜீத் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகிவரும் ‘சாஹோ’ திரைப்படத்தின் ‘மழையும் தீயும்’ என்ற பாடலின் டீசர் வெளியாகியுள்ளது.
இந்த பாடலின் டீசர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என நான்கு மொழிகளில் வெளியாகியுள்ளது.
இதில் பிரபாஸுக்கு ஜோடியாக பொலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் நடித்துள்ளார்.
நீல் நிதின் முகேஷ், லால், அருண் விஜய், வெண்ணிலா கிஷோர், மகேஷ் மஞ்சுரேகர், ஜாக்கி ஷராஃப், சங்கே பாண்டே, மந்திரா பேடி மற்றும் பலர் நடிக்கும் இப்படத்தை யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இத்திரைப்படம் வரும் ஒகஸ்ட் மாதம் 15ஆம் திகதி உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய நான்கு மொழிகளில் வெளியாகவுள்ளது.