தெலுங்கில் மிகவும் பிரபலமாகி தற்போது தமிழ் திரைப்படத்தில் நடித்து வரும் நடிகை ராஷ்மிகா பிற்காலத்தில் நான் வருத்தப்பட விரும்பவில்லை என தெரிவித்துள்ளார்.
அண்மையில் தமிழில் நடிப்பது பற்றி கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்
இதுகுறித்து பேசிய அவர், ”நடிக்கும் கதாபாத்திரம் வலுவானதாக இல்லை என்றால் மக்களின் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. அதனால் கெமர்ஷியல் படங்களில் நடிக்க மறுப்பது இயக்குநர்களுக்கு நிச்சயம் பிடிக்காது.
கெமர்ஷியல் படங்களில் மட்டுமே நடித்தால் சில ஆண்டுகள் தான் தாக்குப்பிடிக்க முடியம். எத்தனை ஆண்டுகள் இந்த துறையில் இருக்கிறேன் என்பதை தாண்டி நான் நடிக்கும் படங்களை நினைத்து பெருமைப்பட விரும்புகிறேன்” எனக் கூறியள்ளார்.
ராஷ்மிகா ‘கிரிக் பார்ட்டி’ என்ற கன்னடம் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார்.
தமிழில் 2019ம் ஆண்டு நடிகர் கார்த்தி சிவகுமாரின் 19வது திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகியுள்ளார். இத்திரைப்படம் வெளிவருவதற்கு முன்பே சிவகார்த்திகேயனின் ‘SK 17’, ‘டியர் காம்ரேட்’ என தமிழ் திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகினார். அதேநேரம் லோகேஷ் கனகராஜ் விஜய்யை வைத்து இயக்கும் ‘தளபதி 64’ படத்தில் ராஷ்மிகா நடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கன்னட நடிகையான ராஷ்மிகா தமிழ், தெலுங்கு திரையுலகில் வளர்ந்து கொண்டிருக்கிறார்.