நடிகை சினேகாவுக்கு இன்னும் ரசிகர்களின் மனங்களில் புன்னகை அரசி என்ற பெயருடன் இடம் உள்ளது. நடிகர் பிரசன்னவுடன் திருமணத்திற்கு பின் படங்களுக்கு பிரேக் கொடுத்திருந்தார்.
மகன் விகான் வளர்ந்துவிட்டதால் மீண்டும் படங்களில் நடிக்க தொடர்ங்கியுள்ளார். தற்போது கன்னடத்தில் எடுக்கப்பட்டுள்ள குருசேத்ரா என்னும் படத்தில் திரௌபதியாக நடித்துள்ளார்.
இதிகாசமான மஹாபாரத கதையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில் நடிகர் அர்ஜூன் கர்ணனாக நடித்துள்ளார். பீஷ்மராக அம்பரீஷ், கிருஷ்ணர் ஆக வி.ரவிச்சந்தர், அர்ஜூனனாக சோனு சூட், சகுனியாக ரவிச்சந்தர் ஆகியோர் நடித்துள்ளார்.
ஆகஸ்ட் மாதம் வெளியாகவுள்ள இந்த 3D படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் இப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.