அஜித்தின் விஸ்வாசம் படம் இந்த வருடத்தின் முதல் ஹிட். இப்பட வசூல் சாதனையை இன்னும் வேற எந்த படமும் முறியடிக்கவில்லை என்று தான் கூற வேண்டும்.
சசிகுமார் நடித்துள்ள கென்னடி கிளப் படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் சென்னையில் நடைபெற்றது. அதில் பேசிய தயாரிப்பாளர் டி.சிவா, டி.இமான் இசையை பாராட்டிய அவர் விஸ்வாசம் படம் ரூ. 100 கோடி வசூலித்தது என்றால் அது கண்ணான கண்ணே பாடலால் தான்.
இப்பாடலுக்காகவே விஸ்வாசம் படக்குழுவினர் அவருக்கு ரூ. 50 கோடி தர வேண்டும் என்று புகழ்ந்து பேசியுள்ளார்.