மணிரத்னம் இயக்கவுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பிரபல இயக்குநர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடிப்பதற்கு இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் ஒப்பந்தமாகியுள்ளனர்.
கல்கியின் சரித்திர நாவலான பொன்னியின் செல்வனே திரைப்படமாக உருவாக்கப்படவுள்ளது.
இதில் விக்ரம் ஆதித்யா கரிகாலனாகவும், கார்த்தி வந்தியத்தேவனாகவும், ஐஸ்வர்யா ராய் நந்தினியாகவும், கீர்த்தி சுரேஷ் குந்தவையாகவும், ஜெயம் ரவி ராஜ ராஜ சோழனாகவும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தில் தானும் இணைந்துள்ளதாக இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.