விஷால் நடித்து முடித்துள்ள ‘அயோக்யா’ திரைப்படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் அடுத்ததாக அவர் சுந்தர்-சி இயக்கவுள்ள ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் ஐம்பது நாட்கள் படப்பிடிப்பு துருக்கியில் நடைபெறவுள்ளது. இதற்காக தொழில்நுட்பக் குழு ஏற்கனவே துருக்கி சென்றுவிட்டது.
இப்படத்தின் முக்கிய காட்சிகள் துபாயில் உள்ள ‘காபடோசியா’ என்ற வரலாற்று சிறப்பு மிக்க பகுதியில் படமாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதே இடத்தில் தான் ‘சந்திரமுகி’ படத்தில் இடம்பெற்ற ‘கொஞ்ச நேரம்’ என்ற பாடல் காட்சி படமாக்கப்பட்டது.
விஷாலின் இப்படத்தில் தமன்னா, ஐஸ்வர்யா லட்சுமி உட்பட பலர் நடிக்கவுள்ளனர். மேலும் படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருகிறது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.