தெலுங்கு சினிமா உலகின் முன்னணி நடிகர் பவன் கல்யாண். சினிமாவில் நடிப்பது மட்டுமில்லாமல் தீவிர அரசியலிலும் ஈடுப்பட்டு வருகிறார்.
இவரது தலைமையில் உள்ள ஜன சேனா கட்சி விரைவில் நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலிலும் அதனுடன் சேர்த்து நடைபெற இருக்கும் ஆந்திர சட்டசபை தேர்தலிலும் போட்டியிடவுள்ளது.
மேலும் அம்மாநிலத்திலுள்ள தெலுங்கு தேசம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிகளின் வெற்றி வாய்ப்பை பவன் கல்யாணின் கட்சி தட்டி பறிக்கும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதற்காக பவன் கல்யாண் தீவிர பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு வருகிறார்.
தேர்தல் பிரச்சாரத்தில் சாலை ஓரத்தில், ஓலை பாய் ஒன்றில் அமர்ந்து பவன் சாப்பிடும் வீடியோ ஒன்று இணையங்களில் வைரலாகி வருகிறது.
Election time: #Pawan kalyan at Manginapudi near Machilipatnam, krishna district. #Elections2019 #Andhrapradesh pic.twitter.com/CDT7FvBCcX
— P Pavan (@pavanmirror) March 24, 2019