நடிகர் அஜித் தற்பொழுது நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் ஹிந்தியில் வெளியாகி வெற்றியீட்டிய திரைப்படமான பிங்க் திரைப்படத்தை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த திரைப்படத்தினை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இயக்குகிறார். இந்நிலையில் இந்த திரைப்படத்தில் பாடலாசிரியரான பா.விஜய் மூன்று பாடல்களை எழுதவுள்ளதாக தற்பொழுது தகவல்கள் வெளியாகியுள்ளன.
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ள இந்த திரைப்படத்தில், அஜித் மற்றும் வித்தியாபாலனுக்கு இடையிலான காதல் பாடலை அவர் எழுதிமுடித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்பொழுது தீவிரமாக இடம்பெற்றுவரும் நிலையில், ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
2013ஆம் ஆண்டு வெளியாகி இரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படமான ஆரம்பம் திரைப்பத்திற்கு பிறகு இவர்களின் கூட்டணி அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.