கன்னடத் திரையுலகின் மாபெரும் வெற்றி பெற்ற ‘K.G.F’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் இன்று பூஜையுடன் ஆரம்பமாகியது.
‘K.G.F’ திரைப்படத்தின் முதல் பாகம் அத்தியாயம் 1 என குறிப்பிடப்பட்டது. இதன் இரண்டாம் பாகத்தை அத்தியாயம் 2 என குறிப்பிட்டுள்ளார்கள்.
பிரஷாந்த் நீல் இயக்கும் இந்தப் படத்தில் யாஷ் கதாநாயகனாக நடிக்கின்றார். இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு இன்று (புதன்கிழமை) ஆரம்பமானதை முன்னிட்டு, ‘K.G.F’ திரைப்படத்தின் அத்தியாயம் இரண்டில், தங்கச் சுரங்கத்தை நாயகன் யாஷ், எப்படி ஆதிக்கம் செலுத்துகின்றார் என்பதுதான் இதன் கதையாக அமையவுள்ளது.
இத்திரைப்படம் தெலுங்கு, தமிழ், ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு மிகப்பெரிய வசூலைப் பெற்றது. 50 கோடி ரூபாய் செலவில் தாயாராகி, இதுவரைக்கும் சுமார் 250 கோடி ரூபாள் வரை வசூலித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.