ஹிந்தி தொலைக்காட்சியில் The Kapil Sharma Show என்ற நிகழ்ச்சி படு பிரபலம். இதில் நிறைய நடிகர்கள் வெவ்வேறு வேடங்கள் போட்டு மக்களை சிரிக்க வைப்பார்கள்.
அப்படி இந்த ஷோவில் வயதான பாட்டி வேடம் போட்டு நடித்தவர் அலி அஸ்கர். இவர் நேற்று காலை பயங்கர விபத்து ஒன்றில் சிக்கியுள்ளார்.
கார் முழுவதும் நொறுங்கும் அளவிற்கு விபத்து ஆக அலி எந்த ஒரு காயமும் இல்லாமல் தப்பியுள்ளாராம்.
இதுகுறித்து அவர் கூறுகையில், நான் தான் காரை ஓட்டிச் சென்றேன், சிக்னலில் நின்று கொண்டிருக்கும் போது பெரிய சத்தம் கேட்டது. அப்போது தான் எனக்கு தெரிந்தது என்னுடைய கார் முன்பு இருந்த லாரி மீது மோதியிருக்கிறது என்று, கார் முழுவதும் நொறுங்கிவிட்டது, நான் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினேன் என பேசியுள்ளார்.