நடிகர் பிருத்விராஜ் நடிப்பு, இயக்கம், தயாரிப்பு என ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்து வருகின்றார்.
அந்தவகையில், வித்தியாசமான கதைகளில் நடித்து வரும் பிருத்விராஜ், நீண்ட நாட்கள் கழித்து ‘பிரதர்ஸ் டே’ திரைப்படத்தில் வழக்கமான கலகலப்பான கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.
இத்திரைப்படத்தை இயக்குவதன் மூலம் இயக்குனராக அறிமுகமாகின்றார் நகைச்சுவை நடிகர் கலாபவன் சாஜன்.
‘பிரதர்ஸ் டே’ திரைப்படத்தின் ஆரம்பவிழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) பூஜையுடன் நடைபெற்றது. இந்த விழாவில் பிருத்விராஜ், நடிகைகள் ஐஸ்வர்ய லட்சுமி, பிரயாகா மார்டின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
லிஸ்டின் ஸ்டீபன் தயாரிக்கும் இத்திரைப்படத்திற்கு, பிரபல இயக்குனர் நாதிர்ஷா இசையமைக்கின்றார்.