பிக்பாஸ் நிகழ்ச்சியை யாராலும் மறக்க முடியாது. இது தென்னிந்திய தொலைக்காட்சி வரலாற்றில் மிக முக்கிய இடம் பிடித்த ஒன்று. ஹிந்தியில் தொடங்கி கன்னடா, தமிழ், தெலுங்கு, மலையாளம், மராத்தி என பல மொழிகளில் நடத்தி வருகிறது.தமிழ், தெலுங்கில் இந்நிகழ்ச்சி 3 வது சீசனை எட்டவுள்ளது. அண்மைகாலமாக தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 பற்றி தகவல்கள் வந்த வண்ணம் இருக்கின்றன.
சீசன் 1 ஐ தொடர்ந்து மீண்டும் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இதில் கீழே குறிப்பிட்டவர்கள் கலந்துகொள்ள போவதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இம்முறை Commoner யாரும் இல்லை என சொல்லப்படுகிறது.