நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஜித்தன் ரமேஷ் நடிப்பில் உருவாகிவரும் ‘ஒங்கள போடணும் சார்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்படவுள்ளது.
நடிகர் ஆர்யா தனது சமூகவலைத்தள பக்கத்தில் நாளை (வியாழக்கிழமை) மாலை 5 மணிக்கு இதனை வெளியிடவுள்ளார்.
இத்திரைப்படத்தில் சனுஜா சோமநாத், ஜோனிட்டா, அனு நாயர், பரிட்சித்தா, வைஷாலி ஆகிய 5 அறிமுக கதாநாயகிகள் நடிக்கின்றார்கள்.
இரட்டை இயக்குநர்களான ஆர்.எல்.ரவி மற்றும் ஸ்ரீஜித் இயக்கி வருகின்றார்கள். பாடலாசிரியர் முருகன் மந்திரம், இத்திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் வசனத்தை எழுதி இருப்பதோடு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தும் இருக்கின்றார்.