பொலிஸ் அதிகாரி வேடத்தில் அக்ஷன் ஹீரோயினாக நந்திதா ஸ்வேதா நடிக்கின்றார்.
ராம்குமார் சுப்பாராமன் இயக்கத்தில் உருவாகும் ‘ஐபிசி 376’ படத்திலேயே நந்திதா ஸ்வேதா நடித்து வருகின்றார்.
அதிரடி கலந்த த்ரில்லர் படமாக உருவாகும் இதில் நந்திதா ஸ்வேதா முதன்முறையாக அக்ஷன் கதாநாயகியாக பொலிஸ் வேடத்தில் நடித்து வருகின்றார்.
நந்திதா ஸ்வேதா தற்போது தேவி 2, நர்மதா உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் நிலையில் நந்திதாவின் அடுத்த படத்தின் தலைப்பு மற்றும் பெஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
பவர் கிங் ஸ்டூடியோஸ் சார்பில் எஸ்.பிரபாகர் தயாரிப்பாளராக அறிமுகமாகும் இந்த படம் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகி வருகின்றது.