காலா படத்தை தொடர்ந்து பாலிவுட் இயக்குநருடன் கைகோர்த்துள்ள பா.இரஞ்சித் புதிய படமொன்றினை இயக்கவுள்ளார்.
பாலிவுட் இயக்குநர் ஜோதிநிஷாவுடன் இணைந்து புதிய கூட்டணியொன்றினை அமைக்கவுள்ளதாக பா.ரஞ்சித் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
இதற்காக 60 நாட்களில் சுமார் ரூ.60 இலட்சத்தைத் திரட்ட இரு இயக்குநர்களும் முயற்சித்து வருகின்றனர். இப்படம் வரலாறு படைக்கும் எனவும், இப்படத்தில் ஒரு அங்கமாக இருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும் பா.ரஞ்சித் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.