நடிகர் சூர்யாவின் மனைவியும் நடிகையுமான ஜோதிகாவின் நடிப்பில் கடைசியாக காற்றின் மொழி படம் வெளியாகியிருந்தது. அதன்பின் சில வாரங்களுக்கு முன்னர் தனது கணவரின் தயாரிப்பில் புதியதொரு படத்தில் கமிட்டாகினார்.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட ஜோதிகாவிடம் கடந்த 2018ல் வெளியான படங்களில் உங்களுக்கு மிகவும் பிடித்த படம் எது என கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு அவர் தனது கணவர் சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட படங்களை எல்லாம் தவிர்த்து விஷ்ணு விஷாலின் ராட்சசன் படத்தை கூறிவிட்டார்.