நடிகர் நெப்போலியன், கவுதம் கார்த்திக் நடிப்பில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வெளியாகியிருந்த படம் முத்துராமலிங்கம். ராஜதுரை இயக்கியிருந்த இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.
இந்த படத்துக்காக நெப்போலியனுக்கு கரூர் மாவட்டம் வடக்கு பகுதியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவர் சுமார் 1.10 கோடி ரூபாயை கடனாக வழங்கியிருந்தார்.
அத்தொகையில் படம் வெளியாகும் போது ரூ.53.54 லட்சத்தை முதல் தவணையாக தருவதாக நெப்போலியன் வாக்கு கொடுத்திருந்தார். ஆனால் இதுவரை ரூ.25 லட்சத்தை மட்டுமே கொடுத்திருக்கும் நெப்போலியன் அனுப்பிய மீதி ரூ.28.54க்கான காசோலை பணமின்றி திரும்பி வந்துள்ளது.
இதனால் கோபாலகிருஷ்ணன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்றம் 5 முறை சம்மன் அனுப்பியும் நெப்போலியன் ஆஜாராகததால் கடந்த 22ஆம் தேதி பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.