பாகுபலி படத்திற்கு பிறகு நடிகர் பிரபாஸ் மற்றும் அனுஷ்கா ஷெட்டு இருவரும் காதலித்து வருவதாக கிசுகிசு கிளம்பியது. அவர்கள் இதுபற்றி மறுத்தாலும் அது ஓய்ந்தபாடில்லை.
ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசும்போது அனுஷ்காவை நான் காதலிக்கவில்லை என உறுதியாக கூறினார் பிரபாஸ், மேலும் சந்தேகம் இருந்தால் இயக்குனர் ராஜமெளலியை கேளுங்கள் என கூறினார்.
இந்நிலையில் தற்போது அனுஷ்கா-பிரபாஸ் ஜோடியாக ஜப்பான் செல்லவுள்ளதாக தகவல் பரவிவருகிறது. அவர்கள் ஜோடியாக நடித்த மிர்ச்சி படம் தற்போது அந்த நாட்டில் திரையிடப்படுகிறதாம், அதற்காகத்தான் இருவரும் செல்லவுள்ளனர் என கூறப்படுகிறது.
மிர்ச்சி படத்தோடு டார்லிங் படமுன் திரையிடப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.