பிரபல தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு சீரியல் ராஜா-ராணி. இதில் செம்பா என்ற கேரக்டரில் நடித்து பயங்கர பாப்புலர் ஆனவர் ஆல்யா மானஸா.
இந்த சீரியலின் மூலம் தான் இவருக்கும் சீரியலின் ஹீரோ கார்த்திக்குக்கும் காதல் தொற்றி கொண்டது. இதனால் தற்போதைக்கு இருக்கும் ஹாட் ஜோடிகளில் இவர்களும் ஒருவர்.
இந்நிலையில் ஆல்யாவின் பெயரை கொண்ட டுவிட்டர் பக்கம் ஒன்றில் எனது தங்கையுடன் ஷாப்பிங் சென்றேன் என்ற பெயரில் ஆல்யாவுடன் ஒரு பெண் இருக்கும் புகைப்படம் ட்ரெண்டிங்காகி வருகிறது. செம்ம அழகாக இருக்கும் அந்த பெண் உண்மையில் ஆல்யாவின் தங்கை தானா என்பது தெரியவில்லை.
Shopping with my sister ? pic.twitter.com/HDEwa3po8X
— Alya manasa (@alyamanasa) February 24, 2019