நடிகர் விஜய்யை வைத்து தலைவா என்ற வெற்றி படத்தை கொடுத்தவர் ஏ.எல்.விஜய். அப்படம் வெளியாக பெரிய பிரச்சனையை சந்தித்தது.
ரசிகர்கள் அதற்காக பொறுமை இழக்காமல் தளபதியை திரையில் காண காத்துக் கொண்டிருந்தனர். பின் பிரச்சனைகளுக்கு பின் படம் வெளியாகி நன்றாகவும் ஓடியது. இந்த நிலையில் இயக்குனர் ஏ.எல். விஜய் ஒரு விருது நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.
அப்போது அவரிடம் விஜய்யின் பயோபிக் வாய்ப்பு வந்தால் இயக்குவீர்களா என்று கேட்டதற்கு, கண்டிப்பாக இயக்குவேன், அதற்கு அவருடைய மகன் சஞ்சய் நடித்தால் நன்றாக இருக்கும் என கூறியுள்ளார்.