விஜய்யுடன் சர்க்கார் படத்தில் மிரட்டலாக நடித்தவர் கஸ்தூரி. பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வரும் இவருக்கு எப்போதும் பாராட்டுகள் தான்.
இத்துடன் முக்கிய சானல் ஒன்றில் உன்னை அறிந்தால் என்ற பெண்களுக்கான விவாத நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். சமூக நல ஆர்வலராகவும் இருந்து வருகிறார்.
இந்நிலையில் சுந்தர் பாலு இயக்கும் கன்னித்தீவு என்ற படத்தில் படத்தில் நடித்து வருகிறார். அவருடன் ஐஸ்வர்யா தத்தா, ஆஷ்னா சவேரி, சுபிக்ஷா, மொட்டை ராஜேந்திரன் என பலர் நடிக்கிறார்கள்.
இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கேரளாவில் நடந்துள்ளது. முதல் காட்சியே முதலையுடன் மோதும் காட்சியாம். இதில் பெரிய ஏரியில் 9 அடி நீளமான முதலையுடன் அந்த 4 நடிகைகளும் சண்டை போட்டுள்ளார்களாம்.