தற்போது உள்ள முன்னணி நடிகர்களில் ரஜினி, கமல் நேரடியாக அரசியலில் குதித்துள்ளனர். அடுத்ததாக விஜய் வருவார் என்று தெரிகிறது.
இந்நிலையில் நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த விஜய்யின் தந்தை S.A.சந்திரசேகரிடம், வருகிற மக்களவை தேர்தலில் விஜய்யின் ஆதரவு யாருக்கு என கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு அவர், இதை நீங்கள் அவரிடம் தான் கேட்க வேண்டும். நான் விஜய்யை மருத்துவராக பார்க்க தான் ஆசைப்பட்டேன். ஆனால் அவர் தான் நடிகராகிவிட்டார் என்றார்.