விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் விஜய் 63 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் முக்கிய பிரபலங்கள் பலர் நடித்து வருகிறார்கள். படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது.
விஜய்யை காண ரசிகர்கள் ஷூட்டிங் தளத்தில் குவிந்து விடுகிறார்கள். அவரின் பெயரை சொன்னதும் ஒன்று கூடக்கூடிய ஒரு பெருங்கூட்டமே இன்று உருவாகிவிட்டது. படத்திற்காக சமூக வலைதளங்களில் இறங்கி வேலை செய்கிறார்கள்.
வெளிநாடுகளிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள். மலேசியாவில் உள்ள இளம் வயதுள்ள ஓவியர் ஒருவர் சினிமா பிரபலங்கள் மட்டுமல்லாது பலரையும் ஓவியாக வரைந்து அசத்தியுள்ளார்.