பிக்பாஸ் நிகழ்ச்சி ஒவ்வொரு மொழியிலும் அங்கு பிரபலமாக இருப்பவர்களை வைத்து நடத்தப்பட்டு வருகிறது. தமிழ் பிக்பாஸின் இரண்டாவது சீசன் சில மாதங்களுக்கு முன்பு தான் முடிவடைந்தது.
இதில் டைட்டில் வின்னராக ரித்விகா வெற்றியடைந்ததை போலவே இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 11வது சீசனின் டைட்டில் வின்னராக ஷில்பா ஷிண்டே தேர்வானார். இதன் மூலம் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் சேர்ந்துவிட்டனர்.
இந்நிலையில் அவர் தேசிய கட்சியான காங்கிரஸில் இணைந்துள்ளார். காங்கிரஸ் கட்சியால் தான் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். ராகுல் காந்தியை பிரதமராக பார்க்க விரும்புவதாகவும் ஷில்பா கூறியுள்ளார்.
மேலும் அவர் லோக் சபா தேர்தலில் வடக்கு மும்பையில் போட்டியிடவும் அதிக வாய்ப்புள்ளதாம்.