தென்னிந்திய திரையுலகில் குறைந்த அளவிலான சினிமா மார்கெட்டை கொண்ட திரையுலகம் என்றால் அது கன்னட திரையுலகம் தான். அத்திரையுலகத்தில் இருந்து ராஜ்குமார் போன்ற சில நடிகர்களே வெளியுலகத்திற்கு தெரிகின்றனர். KGF மூலம் யாஷ் பிரபலமாக தொடங்கியுள்ளார்.
அதனால் அம்மொழியில் எந்த வேற்று மொழி படமும் கடந்த 50 ஆண்களாக டப் செய்யப்படுவது கிடையாது. ஏன் பிரமாண்டம் பாகுபலி, பாகுபலி-2 கூட டப் செய்யபடவில்லை என்றால் பார்த்து கொள்ளுங்கள்.
ஆனால் இந்த நிலையை உடைத்தெறிந்து அஜித்தின் விவேகம் கமெண்டோ என்ற பெயரில் சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது.
அதனை தொடர்ந்து ஆரம்பம் தீரா என்ற பெயரிலும் என்னை அறிந்தால் சத்யதேவ்IPS என்ற பெயரிலும் வெளியாகின. தற்போது நாலாவது படமாக விஸ்வாசம் படம் ஜகமலா என்ற தலைப்புடன் கன்னடத்தில் டப் செய்யப்பட்டு வெளியாக உள்ளது.