கார்த்திக் சுப்புராஜுடன் பேட்ட படத்தில் நடித்து முடித்துள்ள ரஜினி அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸுடன் புதிதாக ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.
தற்போது இந்த படத்தை பற்றிய பேச்சு தான் அதிகமாக எழுந்துவரும் நிலையில் இப்படத்திற்கு இசையமைக்கப்போவது அனிருத் தான் என்பது கிட்டத்தட்ட முடிவாகிவிட்டது.
மேலும் ஒளிப்பதிவாளராக பேட்ட படத்தில் பணியாற்றிய திருநாவுகரசர் பணியாற்றுவார் என்று கூறப்பட்ட நிலையில் இது பற்றி அவரிடம் யாரும் பேசவில்லையாம்.
அதே நேரத்தில் ரஜினியின் தளபதி படத்தின் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் ரஜினியின் 166வது படத்தில் பணியாற்ற தான் அதிக வாய்ப்புள்ளதாம்.