விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 96 படத்தை அறிமுக இயக்குனர் ப்ரேம்குமார் இயக்கியிருந்தார். இப்படத்தின் 100வது நாள் விழா சமீபத்தில் நடந்தது.
இதில் பேசிய விஜய் சேதுபதி, நானெல்லாம் இங்கு வந்ததிலிருந்து த்ரிஷாவை தான் பார்த்து கொண்டிருக்கிறேன். இவ்வளவு அழகான ஒரு பெண்ணை பார்க்கவில்லை என்றால் அது படைத்தவனுக்கு செய்கின்ற துரோகம்.
கடவுள் கிட்ட கேட்டேன், எனக்கு ஏன்ப்பா கண்ணை வெச்ச என்று அதற்கு, அழகான பெண்ணை பார்க்க தான் என்று சொன்னார். அதனால் பார்ப்பதில் தப்பில்லை என அசடு வழிந்தபடி கூறினார்.