காமெடியில் வடிவேலுக்கு பிறகு அவரது இடத்தை சந்தானம் நிரப்புவார் என்று சொல்லப்பட்டது. ஆனால் அவர் காமெடியனாக நடிக்காமல் ஹீரோவாக நடிக்க வந்துவிட்டார்.
இவரது நடிப்பில் இம்மாதம் தில்லுக்கு துட்டு-2 படம் வெளியாக உள்ளது. இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக பத்திரிக்கையாளர் சந்திப்பில் சந்தானம் கலந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், தயாரிப்பாளராக இருப்பது தான் கஷ்டம். ஒருவேளை நான் இயக்குநரானால் ஆர்யாவை வைத்து தான் படம் எடுப்பேன். சிம்புவிற்கென்று கதை எழுதி தான் இயக்க வேண்டும் என நகைச்சுவையாக கூறினார்.