விஜய்யின் நடிப்பில் தளபதி-63 படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை அட்லீ இயக்கி வருகிறார்.
விஜய்க்கு ஜோடியாக 9 வருடங்களுக்கு பிறகு நயன்தாரா நடிக்கும் இப்படத்தில் கதிர், விவேக், யோகி பாபு, ஆனந்த் ராஜ் போன்றோரும் நடிக்கின்றனர்.
இந்நிலையில் இப்படத்தில் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சீதக்காதி போன்ற படங்களில் நடித்திருந்த ராஜ் குமார் இணைந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.