டிரம்ஸ் சிவமணியை தெரியாதவர்கள் இருக்க முடியாது. இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் ஆஸ்தான இசைக்கலைஞராக விளங்கியவர். அவருடன் பல படங்களில் பணியாற்றியுள்ளார்.
விக்ரம் பிரபு நடித்த அரிமா நம்பி, அதர்வா நடித்த கணிதன் படங்களுக்கு இசையமைத்தார். இவருக்கு அண்மையில் பத்ம ஸ்ரீ விருதை மத்திய அரசு அறிவித்தது.
இது குறித்து அவர் பேசுகையில் என்னுடைய 45 வருட இசை பயணத்திற்கு கிடைத்த அங்கீகாரம் தான் இந்த விருது. எதையும் எதிர்பார்க்காமல் நான் இந்த துறையில் சிறப்பாக வேலை செய்தேன்.
இதற்காக நான் செய்யாத முயற்சிகளே இல்லை. அதற்கு தான் இந்த அங்கீகாரம். இவ்விருதை என் தாய்க்கு சமர்ப்பிக்கிறேன் என கூறியுள்ளார்.
விஜய் நடித்த மெர்சல் படத்தில் பணியாற்றிவர் இசை வெளியீட்டு விழாவில் டிரம்ஸ் வாசித்து பலரையும் கவர்ந்தவர். படத்தில் வந்த ஆளப்போறான் தமிழன் பாடலுக்கு டிரம்ஸ் வாசித்து அத்தனை பேரையும் ஆடவைத்தவர். இப்பாடல் எப்படியான ஒரு புரட்சியை உண்டாக்கியது என்பது உங்களுக்கு நன்கு தெரியும் தானே..
நாடு முழுக்க அவருக்கு ரசிகர்கள் இருந்தாலும் விஜய் ரசிகர்கள் இந்த விசயத்தால் தற்போது மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.