வருடம்தோறும் வழங்கப்படும் பத்ம விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் பத்மஸ்ரீ விருதுக்கு நடிகர் பிரபுதேவா தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் மலையாள நடிகர் மோகன்லாலுக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
பரதநாட்டிய கலைஞர் நர்த்தகி நட்ராஜ், டிரம்ஸ் சிவமணி, ஷங்கர் மஹாதேவன், கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர், தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல், பங்காரு அடிகளார் ஆகியோருக்கும் பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்படவுள்ளது.
விருது பெறும் பிரபலங்களுக்கு தற்போது வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.