விஜய் ரசிகர்கள் தற்போது மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். விஜய் 63 படத்திற்காக அட்லீ இயக்கத்தில் விஜய்யுடன் நயன் தாரா ஜோடி சேர்கிறார்.
இப்படத்தில் விஜய் விளையாட்டு கோச்சாக இருக்கிறார் என தகவல்கள் வந்தது. மேலும் இப்படத்தில் யோகி பாபு, ரோபோ சங்கரின் மகள், விவேக் என பல பிரபலங்கள் இணைந்துள்ளார்கள்.
இப்படத்தின் டைட்டில் என்ன வாகும் இருக்கும் என்ற பேச்சு தான் இப்போது ரசிகர்கள் மத்தியில். இதற்கிடையே விஜய் ரசிகர்கள் சந்திக்க தன் காரை விட்டு இறங்கி வந்தது வைரலாகிவிட்டது.
தற்போது முக்கிய பத்திரிக்கை ஒன்றில் விஜய்யின் சர்கார் புகைப்படத்தின் லுக்கை முன் பக்கத்தில் பதித்து, ஆளப்போறான் தமிழன் என டைட்டில் கொடுத்துள்ளார்கள்.
இதனை பார்த்த ரசிகர்கள் தற்போது அதனை அதிகமாக பகிர்ந்து வருகிறார்கள்.