பேட்ட படம் திரைக்கு வந்து செம்ம வசூல் சாதனை செய்து வருகின்றது. இப்படத்தில் ஸ்டெண்ட் காட்சிகள் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றது.
இந்த ஸ்டெண்ட் காட்சியை வடிவமைத்தவர் ரஜினியின் பேவரட் ஸ்டெண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெய்ன் தான்.
ஏனெனில், அவரே பீட்டர் ஹெய்னை இந்த படத்தில் போடுங்கள் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஹெய்ன் சமீபத்தில் ஒரு பேட்டியில் ‘நான் ஆரம்பத்தில் அவர் படத்தில் டூப் போடும் போது ஒரு நாள் எழும்பு உடைந்துவிட்டது, அதையும் பொறுத்துக்கொண்டு நான் நடித்ததை பார்த்த சார், என்னை கட்டிப்பிடித்து அழுதார்.
அது மட்டுமில்லை இன்று என் குடும்பத்தில் மகன், மகள் இருவரும் நன்றாக படித்து இந்த நிலைமையில் இருக்கிறார்கள் என்றால், அதற்கு காரணம் ரஜினி சார் தான், இதை நான் முதன் முறையாக கூறுகின்றேன்’ என தெரிவித்துள்ளார்.