தமிழ் சினிமாவில் மிகப்பெரும் ரசிகர்கள் பலத்தை கொண்டவர்கள் விஜய், அஜித். இவர்கள் படங்கள் வந்தாலே திரையரங்கு திருவிழா போல் காட்சியளிக்கும்.
இவர் நடிப்பில் சமீபத்தில் விஸ்வாசம் படம் திரைக்கு வந்து வெற்றி நடைப்போடுகின்றது. இந்நிலையில் தமிழிசை சௌந்தர்ராஜன் ‘அஜித் ரசிகர்களால் தமிழகத்தில் பிஜேபி முன்னேறும்’ என்று கூறியுள்ளார்.
அதற்கு அஜித் ரசிகர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவிக்க, ஒரு ரசிகர் கிண்டலாக ‘நாங்கள் விஜய் ரசிகர் மன்றத்தில் கூட சேர்வோம், உங்கள் கட்சிக்கு வரமாட்டோம்’ என பதில் அளித்துள்ளது செம்ம வைரலாகி வருகின்றது…