விஸ்வாசம் படம் A செண்டர் ஆடியன்ஸை விட B,C யில் பலரையும் மிகவும் கவர்ந்துவிட்டது என்பதே நிதர்சனம். 11 நாட்களை கடந்து படம் இன்னும் ஹவுஸ் ஃபுல்லாக பல இடங்களில் ஓடுவதை காணமுடிகிறது.
தியேட்டர் உரிமையாளர்கள் விஸ்வாசம் படம் நன்றாக ஓடிக்கொண்டிருப்பதாக அவ்வப்போது நிலவரத்தை பதிவு செய்துவருகிறார்கள். குறிப்பாக குடும்பத்துடன் படம் பார்க்க வருகை தருபவர்களின் கூட்டம் அதிகம்.
இந்நிலையில் மூதாட்டி ஒருவர் விஸ்வாசம் படத்தை பார்த்துவிட்டு அஜித் அருமையாக நடித்துள்ளார். இதுவரை இப்படியொரு படம் வந்ததே இல்லை. இன்னும் பல முறை இந்த படத்தை பார்க்கலாம்.
பாசமலர் படத்திற்கு பிறகு இந்த படம் தான் என கூறியுள்ளார். சிவாஜி, சாவித்திரி, ஜெமினி கணேசன் நடிப்பில் வந்த பாசமலர் வெள்ளி விழா கண்டதோடு 26 வாரங்கள் படம் ஓடியது என்பது குறிப்பிடத்தக்கது
#Viswasam Day-11 Public Opinion
அஜித் அருமையா நடிச்சிருக்கார். இன்னும் எத்தனை தடவை வேணாலும் பார்க்காலாம். சந்தோஷத்துக்கு அளவே இல்லை – வயதான பாட்டி?@directorsiva @SathyaJyothi_ #ViswasamWinningHearts pic.twitter.com/FRlsG9OOTb
— THALA AJITH FANS CLUB TIRUNELVELI™ (@tvl_thala) January 20, 2019