கடந்த 42 ஆண்டுகாலமாக தமிழ் சினிமாவை ஆட்சி செய்து கொண்டிருப்பவர் ரஜினிகாந்த். ஆனால் அவரது கடைசி சில படங்கள் அவ்வளவாக வெற்றி பெறவில்லை.
இவ்வளவு ஏன் 500 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட 2.0 படம், முதல் பாகமான எந்திரன் அளவிற்கு கூட பிரபலமாகவில்லை. இது எல்லாம் ரஜினியின் தாக்கம் குறைந்ததை காட்டுவதாக சினிமா விமர்சகர்கள் கூறிவருகின்றனர்.
இதை தான் பிரபல தயாரிப்பாளரான கே.ராஜன் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். அதில், ரசிகர்களின் விருப்பம் மாறிவிட்டது. இதனால் ரஜினி சார் சினிமாவில் இருந்து விலகினார் என்றால் ரொம்ப பெரிய மரியாதையாக இருப்பார்.
கமல் ஏறக்குறைய விலகிவிட்டார். அதைப்போல் ரஜினியும் விலகினால் மரியாதையாக இருப்பார் என பொறுமையாக கூறினார்.