தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு தனி அடையாளத்தை வைத்திருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. இது அவர் தேர்ந்தெடுக்கும் படங்களை வைத்தே கண்டுபிடித்துவிடலாம்.
அவர் தற்போது நடிப்பதையும் தாண்டி முதன்முதலாக சன்டிவியில் ஒளிப்பரப்பாக இருக்கும் நம்ம ஊர் ஹீரோ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார்.
வரும் வாரத்திலிருந்து தொடர்ச்சியாக ஞாயிற்று கிழமைகளில் மட்டும் ஒளிப்பரப்பாக உள்ள இந்த நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.
நாளைய தலைமுறைக்கு வழிவகுக்கும் இன்றைய தலைமுறையின் கதாநாயகனைக் கொண்டாடும் விஜய் சேதுபதியின் நம்ம ஊரு ஹீரோ! #NammaOoruHero வரும் ஞாயிறு முதல் இரவு 9:30 மணிக்கு உங்கள் #SunTV-யில் காணத்தவறாதீர்கள். @VijaySethuOffl pic.twitter.com/5XsOLpoImy
— Sun TV (@SunTV) January 17, 2019