ஒவ்வொரு பருவத்திலும் ஒவ்வொரு சேலஞ்ச்கள் பிரபலமாக இருக்கும். சில மாதங்களுக்கு முன்பு ஐஸ் பக்கெட் சேலஞ்ச், கிகி சேலஞ்ச் பிரபலமாக இருந்தது.
தற்போது அந்த வரிசையில் 10 இயர்ஸ் சேலஞ்ச் வேகமாக ட்ரெண்டாகி வருகிறது. ரசிகர்களை தாண்டி சினிமா பிரபலங்கள் பலரும் தங்களது 10 வருடத்திற்கு முந்தைய புகைப்படத்தையும் தற்போதைய புகைப்படத்தையும் இணைத்து பதிவிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் விஜய்யின் மெர்சல் படத்தை தயாரித்த தேனாண்டாள் பிலிம்ஸின் CEO ஹேமா ருக்மணி 10 வருடத்திற்கு முன்பு விஜய்யுடன் எடுத்த கொண்ட போட்டோவையும் மெர்சல் படப்பிடிப்பின் போது எடுத்து கொண்ட போட்டோவையும் இணைத்து பதிவிட்டுள்ளார்.
Pictures with Thalapathy a decade apart, grinning wide, enjoying the #fanmoment #10yearchallenge #nofilterneeded #alwaysandforever #fangirl #ThalapathyFans #ThalapathyVijay @vasukibhaskar …ok va ! pic.twitter.com/YCm5mfhdAN
— Hema Rukmani (@Hemarukmani1) January 17, 2019