விஜய் மூன்றாவது முறையாக இளம் இயக்குனர் அட்லீயுடன் கூட்டணி அமைத்துள்ளார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் விளையாட்டை மையப்படுத்திய படம் என்பது ஏற்கெனவே வெளியான தகவல்.
படத்திற்காக படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்கும் என கூறப்படுகிறது. இந்த நேரத்தில் தான் படத்தில் பரியேறும் பெருமாள் பட புகழ் கதிர், யோகிபாபு, விவேக் போன்றவர்கள் இணைந்துள்ளார்கள் என்று செய்தி வந்தது.
அடுத்தபடியாக தற்போதைய தகவல் என்னவென்றால் படத்தில் நாயகியாக நயன்தாரா இருக்க கீர்த்தி சுரேஷ் மற்றும் ஆத்மிகா படத்தில் நடிக்கிறார்கள் என்ற செய்தி உலா வருகிறது.
அட்லீ படத்தில் இரண்டுக்கும் மேற்பட்ட நாயகிகள் இருப்பது வழக்கம் ஆனால் இவர்கள் உள்ளார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.